Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

மிஸ்டர் கண்டி போட்டியில் இராணுவ உடற்கட்டழகர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள்

கண்டி ஐசிபிடி பல்கலைகழக (ICBT) வளாகத்தில் கடந்த சனிக்கிழமை (13) இடம் பெற்ற மிஸ்டர் கண்டி உடற்கட்டழகர் சம்பியன்ஷிப் - 2021 இல் போட்டியில் இராணுவ உடற்கட்டழகு வீரர்கள் 2 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களையும் வெற்றிகொண்டுள்ளனர். இப்போட்டியில் இராணுவ போட்டியாளர்கள் பல முன்னணி வீரர்களுக்கு சவாலாக இருந்ததோடு, உடக்கட்டமைப்பு வீரர்களுக்கான கழகங்களுக்கும் சவாலாக அமைந்திருந்தனர்.

பதக்கம் வென்றவர்களின் பெயர்கள் விபரங்கள் :

தங்கப் பதக்கம் சிப்பாய் டபிள்யூ.ஆர்.ஜோஷப் மற்றும் 70 கிலோ எடைப் பிரிவில் ஷம்பியன், வெள்ளிப் பதக்கம் கோப்ரல் எம்.டபிள்யூ.கே.சி. பண்டார (85 கிலோ எடைப் பிரிவில்), கோப்ரல் கே.எம்.என்.சி. பண்டார வெள்ளிப் பதக்கம் (75 கிலோ எடைப்பிரிவு), சிப்பாய் எஸ்.எம்.என்.எஸ். சேனாரத்ன வென்கல பதக்கம் (90 கிலோ எடைப் பிரிவு), கோப்ரல் ஏ.ஐ. மல்லவகே வென்கல பதக்கம் (75 கிலோ எடைப் பிரிவு)