Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th March 2022 08:41:47 Hours

மிரிசவெட்டியவில் பாடசாலை உபகரணங்கள் வழங்குதலில் பங்குபற்ற இராணுவ தளபதிக்கு அழைப்பு

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவை வனிதாயர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோர் அனுராதபுரத்தில் 'சந்த ஹிரு சேய சமய நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சனிக்கிழமையன்று வருகைதந்த பொழுது ஏழை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். இந்நிகழ்வினை மிரிசெவெட்டிய நாயக்க தேரர், இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் வண. எத்தலவெதடுனுவெவே ஞானதிலக தேரர் ஏற்பாடு செய்திருந்தார்.

எத்தலவெதடுனுவெவே ஞானதிலக தேரர் வேண்டுகோளுக்கு இணங்க ஈ விஸ் கம்பியூட்டர் பிரைவட் லிமிடின் அனுசரணையில் பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய 1000 மாணவர்களுக்கு அந்த அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.ஒவ்வொரு நிவாரணப் பொதியும் ஒரு பாடசாலை பை, கற்றல் உபகரணங்கள் (புத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள், பென்சில் பெட்டிகள், கணிதக் கருவிகள்), உலர் உணவு பொதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பரிசு கூப்பன்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தன.

மேலும், இந்நிகழ்வின் நிறைவில் பெற்றோருடன் வருகை அனைத்து பயனாளிகளுக்கும் அனுசரணையாளரினால் மதிய உணவும் வழங்கப்பட்டது.ஈ விஸ் கம்பியூட்டர் நிறுவனத்தின் தலைவர் திரு.சஞ்சீவ விக்கிரமநாயக்க மற்றும் அவரது மனைவி ரொஷானே விஜேநாயக்க மற்றும் ஈ விஸ் கம்பியூட்டர் நிறுவன ஊழியர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் கலந்து கொண்டதுடன் மிரிசவெட்டிய விகாரையின் பிரதமகுருவுடன் இவ் ஏற்பாட்டிற்கும் உதவினர்.

நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஏற்பாட்டாளர்கள், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவை வனிதாயர் பிரிவின் தலைவர் திருமதி சுஜீவா நெல்சன் ஆகிய இருவரையும் அந்த பரிசுப் பொதிகளை வழங்குவதற்காக மேடைக்கு அழைக்கப்பட்டனர். இந்த நன்கொடை வழங்கல் நிகழ்வின் போது வடமத்திய மாகாண ஆளுநர் கௌரவ மஹீபால ஹேரத் சமுர்த்தி வீட்டுப் பொருளாதாரம், நுண் கடன், சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஷெஹான் சேமசிங்க, கல்வித் திணைக்கள அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.