Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th August 2023 10:20:49 Hours

மின்னேரிய காலாட் பயிற்சி நிலையத்தின் பயிற்சிகளை இராணுவ தளபதி பார்வையிடுதல்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 25) மின்னேரியா காலாட் பயிற்சி நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஆயுதப் பயிற்சித் பாடத்திட்டத்தின் புதுப்பிப்புகளைப் பார்வையிடுவதற்காக விஜயத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த இராணுவத் தளபதியை காலாட் பயிற்சி நிலையத்தின் படையினரால் இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கவதற்கு முன்னர் காலாட் பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎஸ்கே லியனவடுகே ஆர்எஸ்பீ அவர்களால் வரவேற்கப்பட்டார்.

பின்னர், காலாட் பயிற்சி நிலையத்தின் தளபதியினால் திட்டமிடப்பட்ட மற்றும் நடந்துகொண்டிருக்கும் பயிற்சி அமர்வுகளின் விரிவான விளக்கத்தை அன்றைய பிரதம அதிதியின் முன்னிலையில் வழங்கினார்.

அடுத்து, பயிற்சியாளர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக நிறுவப்பட்ட ஆர்பீஜீ -7 சிமுலேட்டரையும் புதிய மோட்டார் துப்பாக்கிச் சூட்டு சிமுலேட்டரையும் திறந்து வைக்க காலாட் பயிற்சி நிலையத்தின் தளபதி இராணுவத் தளபதியை அழைத்தார். பின்னர் இராணுவத் தளபதி காலாட் பயிற்சி நிலையத்தின் ஆயுத அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்கு முன்பு முகாம் வளாகத்திற்குள் மரக்கன்றை நட்டுவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதியும், காலாட் பயிற்சி நிலையத்தின் தளபதியும் இணைந்து பயிற்சிப் பகுதியை உன்னிப்பாகக் கவனித்து, பயிற்சியில் இருக்கும் படையினருடன் சில வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர்.

அவர் வெளியேறுவதற்கு முன், இராணுவத் தளபதி காலாட் பயிற்சி நிலையத்தின் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில எண்ணங்களை பதிவிட்டார்.

காலாட் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேபீஎஸ்ஏ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டப்ளியுடிசி மெத்தானந்த யுஎஸ்பீ என்டிசி, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ, சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இவ்விஜயத்தில் கலந்து கொண்டனர்.