Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2023 21:12:47 Hours

மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தில் படையலகு ஆயுத பாடநெறி- 85 நிறைவு

மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தில் படையலகு ஆயுத பாடநெறி- 85 (2023/II) சனிக்கிழமை (23) நடைபெற்ற பரிசளிப்பு விழாவுடன் முடிவடைந்தது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக காலாட்படை பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார்.

இப்பாடநெறி 28 மாணவர் அதிகாரிகளின் பங்கேற்புடன் 3 மாதங்களாக நடைபெற்றது. பாடநெறியின் சிறந்த மாணவ அதிகாரியாக இராணுவ பொறியியல் படையணியின் கெப்டன் டி.என் விஜேசூரிய அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.