Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st September 2023 18:08:08 Hours

மின்னேரியா காலாட் பயிற்சி நிலையத்தின் 39வது ஆண்டு நிறைவு விழா

மின்னேரியா காலாட் பயிற்சி நிலையம் அதன் 39 வது ஆண்டு விழாவை 2023 ஓகஸ்ட் 26-31 இல் தொடர்ச்சியான சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளுடன் கொண்டாடியது.

வரலாற்றுச் சிறப்புமிக்க மின்னேரியா 'தேவாலயா'வில் தேவ பூஜை, புராதன சோமாவதிய விகாரையில் போதி பூஜை, சோமாவதிய விகாரையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் மற்றும் இரத்த தானம் ஆகியன ஆண்டு விழாவை சிறப்பித்தன.

காலாட் பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎஸ்கே லியனவடுகே ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர்.

ஆண்டு நிறைவு விழாவின் இறுதி நாளில் (ஓகஸ்ட் 31), வருகை தந்த காலாட் பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎஸ்கே லியனவடுகே ஆர்எஸ்பீ அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், நினைவுச் சின்னமாக காலாட் பயிற்சி நிலையத்தின் நூலகத்திற்கு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்.

பொலன்னறுவை வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்களின் ஒத்துழைப்புடன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு அவர்கள் தோழமை உணர்வில் ஒன்றிணைந்து இரத்த தானம் செய்யும் ஏற்பாட்டை நடாத்தினர்.