Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th December 2022 19:28:27 Hours

மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆண்டு பொது கூட்டத்தில் விரிவுரை

இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் ஜயசேகர அவர்கள் இலங்கை வாகனப் பொறியியல் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் 'இலங்கை இராணுவத்தின் இராணுவ கண்டுபிடிப்புகள் மற்றும் கற்பனைகள்' என்ற தலைப்பிலான விரிவான விரிவுரையை சவ்சிரிபாயவில் அமைந்துள்ள இலங்கை வாகனப் பொறியியல் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நவம்பர் 19 நிகழ்த்தினார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், இந்நிகழ்வில் கலந்துகொண்டு இலங்கை வாகனப் பொறியியல் நிறுவனத்தில் உள்ள பொறியியலாளர்களுக்கு பார்வையாளர்களுக்கும் விரிவுரையை வழங்குமாறு சிரேஷ்ட அதிகாரிக்கு பணிப்புரை வழங்கப்பட்டதை தொடர்ந்து இவ் விரிவுரை வழங்கப்பட்டது.

இலங்கை வாகனப் பொறியியலாளர்கள் நிறுவனம் இலங்கையில் வாகனப் பொறியியல் துறையில் இயங்கும் ஒரு முன்னோடி அமைப்பாகும். மேலும் இலங்கை வாகனப் பொறியியல் நிறுவனமானது தமது வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது தொழில்நுட்ப விரிவுரையை நடத்துவதற்கு ஒரு உதவியாளரை நியமிக்குமாறு இராணுவத் தளபதியிடம் கோரி இருந்தமை குறிப்பிடதக்கதாகும்.