Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th February 2023 19:42:36 Hours

மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரிகளுக்கு டொயோட்டா நிறுவனத்தில் பயிற்சி

வரையறுக்கப்பட்ட டொயோட்டா லங்கா நிறுவனம் (தனியார்) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 25 இராணுவ வீரர்களுக்கு வத்தளை டொயோட்டா லங்கா பயிற்சி வளாகத்தில் பெப்ரவரி 15 முதல் 16 வரை இரண்டு நாட்களுக்கு மீண்டும் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பயிற்சிகளை வழங்கியது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் கருத்தியல் வழிகாட்டலுக்கு இணங்க மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் ஜயசேகர அவர்கள் இந்தப் பயிற்சித் திட்டத்தை முன்னெடுத்தார்.

இலங்கையில் கிடைக்கும் வாகனங்களின் பொது பராமரிப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப பழுதுபார்ப்பு மற்றும் இராணுவக் பாதுகாப்பு பணிகளில் பயன்படுத்தும் வாகனங்களில் அத்தகைய நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது அந்த மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி அதிகாரிகள் வாகனங்களின் மேம்பட்ட தொழில்நுட்பம், தவறுகளைக் கண்டறிதல், பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் வாகனங்களின் நீடித்துழைப்பு தொடர்பான சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் தங்கள் அறிவை மேம்படுத்தவும் வாய்ப்பினை பெற்றனர்.

இந்த செயலமர்வை வரையறுக்கப்பட்ட டொயோட்டா லங்கா நிறுவனம் (தனியார்) நிறுவனத்தின் தலைவர் திரு, சச்சியோ யொத்சுகுர, நிறைவேற்று பணிப்பாளர் திரு. மனோ அத்துகோரள, வரையறுக்கப்பட்ட டொயோட்டா லங்கா நிறுவனம் (தனியார்) நிறுவனத்தின் ஆலோசகர் திரு. உதய பிரான்சிஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.