Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st August 2023 21:43:27 Hours

மாலி 4வது இலங்கை அமைதிகாக்கும் படை குழு நாடு திரும்பல்

மாலி (மினுஸ்மா) ஐக்கிய நாடுகளின் (ஐ.நா.) 4 வது இலங்கை அமைதிகாக்கும் படையணியில் மீதமுள்ள இரண்டாவது குழு, அவர்களின் சேவை சேவைக்காலம் முடிந்து செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 31) நாடு திரும்பியது.

அதன்படி 5வது இலங்கை அமைதிகாக்கும் படை குழுவினர் மாலியில் தங்கள் கடமைகளை பொறுப்பேற்றதை தொடர்ந்து 11 அதிகாரிகள் மற்றும் 62 சிப்பாய்கள் நாடு திரும்பினர்.

68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி, கெமுனு ஹேவா படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜிஎல்எஸ்டபிள்யூ லியனகே யூஎஸ்பீ பீஎஸ்சீ, மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பல அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவர்களை வரவேற்பதற்காக வருகை தந்திருந்தனர்.

4 வது இலங்கை அமைதிகாக்கும் படையில் 20 அதிகாரிகள் மற்றும் 223 சிப்பாய்கள் சென்றிருந்தனர். மேலும் குழுவில் பெரும்பாலும் கெமுனு ஹேவா படையணியின் படையினர் இருந்தனர். அவர்கள் 23 மே 2022 அன்று மாலிக்கு சென்றனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.