Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th June 2023 18:31:22 Hours

மாலியில் 4வது போர் போக்குவரத்து குழுவினால் வெடி குண்டு மீட்பு

ஐக்கிய நாடுகளின் பல பரிமாண ஒருங்கிணைந்த ஸ்திரப்படுத்தல் பணியின் (MINUSMA) கீழ் மாலியில் உள்ள இலங்கை இராணுவத்தின் போர் போக்குவரத்து குழுவின் டெஸ்ஸாலிட்டிலிருந்து காவோ வரையிலான ஒரு வாகனத் தொடரணி நடவடிக்கை நடந்து கொண்டிருந்த போது 20 கிலோ கிராம் கொண்ட ஜெர்ரி கேன் வெடி குண்டு சனிக்கிழமை (ஜூன் 03) காலை சுமார் 10.49 மணிக்கு (உள்ளூர் கண்டுபிடிக்கப்பட்டது.

மாலியில் இலங்கை போக்குவரத்து படைக் குழு உயிருக்கு ஆபத்தான அபாயங்கள், பாதகமான காலநிலை இருந்த போதிலும், எரிபொருள் பவுசர்கள் மற்றும் சரக்கு டிரக்குகளுக்கு தற்போது பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.

சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை இலங்கை போக்குவரத்து படைக் குழு விழிப்புணர்வைப் பாராட்டியதுடன், அந்தக் கடமைகளைச் செய்யும்போது அவர்களின் உயிருக்கு ஆபத்தான அர்ப்பணிப்பைப் பாராட்டினர்.