Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th July 2023 20:05:56 Hours

மாத்தறை பாடசாலை கட்டிடத்திற்கு வர்ணம் பூசும் படையினர்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 613 வது காலாட் பிரிகேடின் 3 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர், பாடசாலை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் சமூகத்திற்கு சேவை செய்யும் நோக்கத்துடன், 2023 ஜூலை 20 தொடக்கம் 21 வரை மாத்தறை நில்வலா கனிஷ்ட வித்யாலயத்தில் சிறு திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கினர்.

ஓர் அதிகாரி மற்றும் 10 சிப்பாய்கள் மோசமாக நிறமாற்றம் அடைந்திருந்த மூன்று மாடி பாடசாலை கட்டிடத்திற்கு வர்ணம் பூசுதல் மற்றும் உடைந்த கூரை மற்றும் தேய்ந்து கூரைத் தகடுகளை மாற்றும் பணியை மேற்கொண்டனர். பாடசாலை அதிபர் திருப்தி அடையும் வகையில் இப்பணி நிறைவேற்றப்பட்டது. 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 613 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 3 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியால் இந்த சமூகத் திட்டம் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டது.