Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th October 2023 22:27:54 Hours

மன்னாரில் 623க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கல்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 54 வது காலாட் படைபிரிவின் 542 வது காலாட் பிரிகேடின் முயற்சியின் பேரில் சனிக்கிழமை (ஒக்டோபர் 28) மன்னார் பிரதேசத்தின் 623 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ‘மனுசத் தெரண’ அனுசரணையுடன் வைத்திய முகாம்மொன்று நடாத்தப்பட்டது.

மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இச்செயற்திட்டத்தின் போது மன்னார் வைத்தியசாலையின் வைத்திய குழுவினர் பார்வை குறைபாடுகள், தொற்றாத நோய்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதுடன் பார்வை பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.

542 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டிஎல்எம் சந்திரசேகர ஆர்டப்ளியுபீ பீஎஸ்சி அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதே திட்டத்தின் போது, இரண்டு ஆதரவற்ற குடும்பங்களுக்கு அவர்களின் மின்சார தேவைகளுக்கு பயன்படுத்த இரண்டு சூரிய மின் கலங்கள் வழங்கப்பட்டன.

அதேவேளை, முருங்கன் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நலனுக்காக ‘மனுசத் தெரண’ நீர் சுத்திகரிப்பு அலகு ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது. மேலும், பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட 400 பொதுமக்களுக்கு 400 மருத்துவ மூக்குகண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

இந் நிகழ்ச்சியில் நானாட்டான் பிரதேச செயலாளர் திரு. மாணிக்கவாசகர் ஸ்ரீ ஸ்கந்த குமார், உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பீ.சனராஜ் மற்றும் முருங்கன் மகாவித்தியாலய அதிபர் திரு.தி.ரிதுயராஜ் குரூஸ் மற்றும் முருங்கன் பிரதேச சுகாதார அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.