Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th December 2022 16:21:39 Hours

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டப் பாடநெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டப் பாடநெறி இல: 25 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் கிரிஷாந்த பீரிஸ் அவர்களின் தலைமையில் திங்கட்கிழமை (டிசம்பர் 5) இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் ஆரம்பமானது.

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் நவம்பர் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பாடநெறியானது 27 அதிகாரிகள், 33 சிப்பாய்கள் மற்றும் பொலிஸாரின் பங்கேற்புடன் டிசம்பர் 12 ஆம் தேதி முடிவடைந்தது.

கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழகங்களின் கற்றறிந்த அறிஞர்கள், இலங்கை மனிதாபிமான சட்ட ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் ஏனைய வளவாளர்கள் விரிவுரைகளை ஆற்றினர். மேலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) பிரதிநிதிகள் பாடநெறியின் போது மாணவர்களுக்காக நான்கு நாள் நீண்ட பயிலரங்கையும் நடத்தினர்.

இலங்கை கவசப் வாகனப் படையணியின் மேஜர் எச்.கே.பி.எம் ஹெட்டியாராச்சிக்கு பாடநெறியில் சிறந்த அதிகாரிக்கான சான்றிதழும், இலங்கை இராணுவ பொது சேவைப் படையைச் சேர்ந்த சார்ஜென்ட் கே.பி.டி.எச்.தயங்கவிற்கு பாடநெறியின் சிறந்த சிப்பாய்க்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.