Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th November 2023 20:18:04 Hours

மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினரால் நிவாரண பணிகள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் திங்கட்கிழமை (நவம்பர் 6) பேரகல, பத்தலேகொட பிரதேசத்திற்கு அருகில் ஹப்புத்தளை - கொழும்பு வீதியில் மண்சரிவினால் தடைப்பட்டிருந்த வீதி சீர்செய்யப்பட்டது.

மோசமான காலநிலையின் காரணமாக நேற்று (நவம்பர் 5) பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்பட்டதுடன், திங்கட்கிழமை (நவம்பர் 6) பெரிய மண் மேடு மற்றும் கற்பாறைகள் வீதியில் விழுவதற்கு முன்னர் இராணுவ குழுவினரால் உடனடியாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களின் ஆதரவுடன் படையினர் பேரகல, பத்தலேகொட ஆகிய இடங்களில் தடைகளை நீக்கி கொழும்பு - ஹப்புத்தளை பிரதான வீதியூடாக வாகனப் போக்குவரத்தை சீர்செய்தனர்.

இதேவேளை, அன்றைய தினம், கொழும்பு - ஹப்புத்தளை பிரதான வீதியில் வல்கஹவெல மற்றும் பொரலந்த ஆகிய இடங்களுக்கு இடையிலான வீதியின் சீறமைப்பிற்கு படையினர் தமது உதவிகளை வழங்கினர்.

மேலும், நவம்பர் 4 - 6 ஆம் திகதிகளில் பொரலந்த பிரதேசத்தில் கூரைகள் மீது விழுந்த மரக்கிளைகளை பொதுமக்களின் உதவியுடன் படையினர் அகற்றினர்.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து, மீட்புக் குழுவினருக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.