Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th April 2024 19:58:33 Hours

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரால் புத்தாண்டு விழா ஏற்பாடு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை ஹப்புத்தளை பிரதேச செயலகம்2024 ஏப்ரல் 18 ஆம் திகதி பிரதேச செயலக மைதானத்தில் பாரம்பரிய நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதேசத்தில் உள்ள பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் இந்த விழாவை ஒழுங்கமைத்தனர்.

கயிறு இழுத்தல், புத்தாண்டு அழகு ராணி 'அவுருது குமரி' தேர்வு, யானைக்கு கண் வைத்தல், பணிஸ் சாப்பிடுதல், தலையணை சண்டை, பானை உடைத்தல், தேங்காய் திருவுதல், இசை நாற்காலி, பலூன் உடைத்தல், சாக்கு ஓட்டம், சமனிலை ஓட்டம், வினோத உடை நிகழ்ச்சி மற்றும் பல சிங்கள மற்றும் தமிழ் பாரம்பரிய நிகழ்ச்சிகள் விழாவை வண்ணமயமாக்கின.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் ஏ.எம்.ஏ அபேசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் சிறப்பு விருந்தினர்களாக அன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.