Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th March 2022 19:46:58 Hours

மட்டக்களப்பில் 500 மாணவர்களுக்கு புலமைப்பரிசு

மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு இந்துக் கல்லூரி மற்றும் மேலும் மூன்று பாடசாலைகளில் கல்வி பயிலும் வறிய குடும்பங்களை சேர்ந்த 501 மாணவர்களுக்கு றோட்டரி கழகத்தின் திருமதி மணபந்தனி சேனாதீர மற்றும் கொழும்பு திரு இந்திரதிஸ்ஸ ஆகியோரின் நிதி உதவியை கொண்டு, புதன்கிழமை (9) இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கல்விக்கான உதவி பொருட்களை வழங்கும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.

இத்திட்டமானது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நலன்புரித் திட்டங்களின் ஓர் அங்கமாக, 23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த அவர்களினால் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலூப பண்டார அவரின் கீழுள்ள 4 கெமுனு ஹேவா படையணியினரால் பயனாளிகள் கரடியனாறு இந்துக் கல்லூரிக்கு அழைப்பிக்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பகிர்ந்தளிக்கப்பட்ட நிவாரணப் பொதிகளில் ஒரு பாடசாலை பை, புத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள், பென்சில் பெட்டிகள், கணிதக் கருவிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான பரிசு வவுச்சர்கள் போன்ற பொருட்கள் உள்ளடங்கியிருந்தன. இத்திட்டம் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவான இராணுவத்தின் “முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020-2025 “ இன் கீழ் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்களின் ஆசிர்வாதத்துடன் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த, 23 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி, 4 வது கெமுனு ஹேவா படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நான்கு பாடசாலைகளினதும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.