Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th April 2024 12:39:43 Hours

போர்ப் பயிற்சிப் பாடசாலையில் கனிஸ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அம்பாறை போர்ப் பயிற்சி பாடசாலையில் இடம் பெற்ற கனிஸ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி – 103 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 09 ஏப்ரல் 2024 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் போர்ப் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இராணுவத்தில் வெவ்வேறு படையணிகளின் மொத்தம் 46 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மூன்று மாத காலப் பயிற்சியைப் பின்பற்றினர். இப்பாடநெறியில் 12 வது கெமுனு ஹேவா படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்.ஏ.பி மதுஷன் பாடநெறியின் சிறந்த மாணவருக்கான சான்றிதழை பெற்றுகொண்டார்.

பரிசளிப்பு நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.