Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2022 18:38:43 Hours

பொறியியல் படைப்பிரிவின் புதிய தளபதி பொறியியல் பிரிகேடிற்கு விஜயம்

இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்கள் 22 நவம்பர் 2022 அன்று கச்சிகல பொது பொறியியல் பிரிகேட் தலைமையகத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

பொது பொறியியல் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிசி பீரிஸ் அவர்கள் பிரதான நுழைவாயிலுக்கு வருகை தந்த இலங்கை இராணுவப் பொறியியலாளர் படைப்பிரிவின் தளபதியை அன்புடன் வரவேற்றார்.

புதிய தளபதி அலுவலகத்திற்கு வருகை தருவதற்கு முன்னராக இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க, பொறியியல் பிரிகேட் படையினரால் புதிதாக நியமனம் பெற்ற தளபதிக்கு பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

வருகையின் நினைவம்சமாக, முகாம் வளாகத்தில் ஒரு மரக்கன்று நடுவதற்கு புதிய தளபதி அழைக்கப்பட்டதுடன் பின்னர் அனைத்து படையினர்களுக்கும் சம்பிரதாயமாக உரையாற்றினார்.

பொது பொறியியல் பிரிகேட் தளபதி, பொது பொறியியல் பிரிகேட் கேணல் திட்டமிடல், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.