Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th February 2023 19:47:13 Hours

பொறியியல் படைப்பிரிவினால் அபேக்ஷா மருத்துவமனைக்கு அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகள் வழங்கல்

மத்தேகொட இராணுவ பொறியியல் படைப்பிரிவு தலைமையகம் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு மருந்துகளின் தேவையை கருத்தில் கொண்டு இத்தாலியை வதிவிடமாக கொண்ட இலங்கையினரின் உதவியுடன் வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 17) அன்று அவற்றை வழங்கியது.

பொறியியல் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட இத் திட்டத்தில் அவசரமாக தேவைப்படும் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சை மருந்துகளான ஒக்ஷலிப்டன்(100 mg), சிஷ்ப்லடின் (50 mg) மற்றும் எடேபேஷைட் (100 mg) ஆகிய மருந்துகள் அடங்கும். மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்களினால் மருந்து பொதிகள் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதன் பின்னர் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகரவிடம் கையளிக்கப்பட்டது.

திரு.சமிந்தபொன்னம்பெரும தலைமையில் இத்தாலியிலுள்ள இலங்கை சமூகத்தினர் இவ் உதவிகளை ஏற்பாடு செய்தனர். அனுசரணையாளர் சார்பாக திருமதி சந்தியா பொன்னம்பெரும மற்றும் திரு.ரொமேஷ்பொன்னம்பெரும அவர்களின் மனைவி மற்றும் நன்கொடையாளரின் மகனும், பொறியியல் படைப்பிரிவின் கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி கேணல் மங்கள பாலசூரிய என்போர் இவ் வழங்கல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.