Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th May 2023 09:28:20 Hours

பொறியியல் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணுசக்தி மற்றும் மின்னணு பாடநெறி

மத்தேகொட இலங்கை இராணுவப் பொறியியல் படையணி தலைமையகத்தில் இடம் பெற்ற இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணுசக்தி மின்னணு பாடநெறி ஐந்தின் நிறைவு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (25) நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் கலந்து கொண்டார்.

மே 04 முதல் மே 25 வரை நடைபெற்ற இப் பயிற்சி நெறியில் 07 அதிகாரிகள், 65 சிப்பாய்கள் மற்றும் 2 பெண் அதிகாரிகள், 15 பெண் இராணுவ வீராங்கனைகளும் இப் பாடநெறியை பின்பற்றினர்.

இதுவரை பொறியியல் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணுசக்தி மின்னணு பாடநெறியில் 33 அதிகாரிகளையும், 197 சிப்பாய்களையும் ஆக மொத்தம் 95 அதிகாரிகள் மற்றும் 602 சிப்பாய்களையும் உருவாக்கப்பட்டுள்ளது.

இப் பாடநெறியில் 12 வது இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் பீஜிஎ சமரவீர அதிகாரிகள் வரிசையில் 1 வது இடத்தையும் லான்ஸ் கோப்ரல் பீஜிஜேஎஸ் சேனாரத்ன சிப்பாய்களின் களின் முதல் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

உள்நாட்டு பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணுசக்தி மற்றும் மின்னணு தொடர்பான பாடநெறியின் மேம்பாடுகள் நவம்பர் 2022 இல், மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களால் தற்போதைய உலகளாவிய ரீதியில் இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணுசக்தி மற்றும் மின்னணு பாடநெறி அணுசக்தி அல்லது தொடர்புடைய அச்சுறுத்தலுக்கு அனைத்து படையினரையும் தயார்படுத்தும் பாடநெறி தொடர்பாக முன்முயற்சி எடுக்கப்பட்டது. இலங்கையின் தேசிய பாதுகாப்பு தேவைகளை உறுதி செய்யும் நோக்கில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதளுக்கமைய இராணுவத்தின் அந்தந்த பாதுகாப்புப் படைத் தலைமையகங்களின் கீழ் பணியாற்றும் ஒவ்வொரு பொறியியல் பிரிவில் இருந்து பாடநெறி பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாடநெறியில் கலந்துகொண்டவர்களுக்கு அவர் ஆற்றிய உரையில், பொறுப்புகள் மற்றும் பணியில் இருக்கும் போது தனிநபர்களின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மற்றும் உலகில் இரசாயன அச்சுறுத்தல்கள் பன்மடங்கு இருப்பதால் இந்த அணுசக்தி கோளத்தில் பயிற்சியைத் தொடர்வது நன்மை தொடர்பிலும் மேலும் கருத்து தெரிவித்தார்.

பாடநெறியில் பங்கேற்பாளர்களுக்கு கோட்பாட்டு மற்றும் நடைமுறை அறிவுடன் இணைந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது. பியகம கம்மா நிலையத்தின் பாட நிபுணர்களின் வெளிகள பயணங்கள் ஆகியவற்றில் இரசாயன ஆயுத உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபை, இலங்கை அணுசக்தி ஒழுங்கு அமைப்பு சபை, இலங்கை அணுசக்தி அதிகார சபை, சுகாதார அமைச்சு மற்றும் முதலீட்டுச் சபையினரால் தேவையான ஏற்பாடு செய்யப்பட்டன.