Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th March 2024 18:55:08 Hours

பொது பணி பணிப்பாளர் நாயகம் 4வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயம்

பதில் பொது பணி பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ வழங்கல் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 24 மார்ச் 2024 அன்று, 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.

4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் நுழைவாயிலில் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பீ.கே. வருவாங்கொடகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எல்எஸ்சீ படை தளபதியை வரவேற்றனர்.

4வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியினால் கடமைகள் மற்றும் பொறுப்புகள் மற்றும் படையினரின் நிலைநிறுத்தம் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வருகை தந்த இலேசாயுத காலாட் படையணியின் படை தளபதி படையினருக்கு உரையாற்றினார்.

உத்தியோகபூர்வ விஜயத்தை குறிக்கும் வகையில் விருந்தினர் பதிவேட்டில் பாராட்டுக் குறிப்புக்களை பதிவிட்டார்.