Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd December 2023 05:33:32 Hours

பொது பணி பணிப்பாளர் நாயகம் அமைதி ஒருங்கிணைப்பு ஆலோசனைக் குழுவின் இலங்கை கிளையின் கெளரவ ஆலோசனை உறுப்பினர் நியமிப்பு

அமைதி ஒருங்கிணைப்பு ஆலோசனைக் குழுவின் இலங்கைக் கிளை, இராணுவ அதிகாரிகள் மற்றும் இலங்கை பொலிஸாருக்கான அமைதி, பாதுகாப்பு மற்றும் பொது இராஜதந்திர கருத்தரங்கை டிசம்பர் 19 அன்று கலதாரி ஹோட்டலில் ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மியோன் லீ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிஐ மஹாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோர் கலந்து கொண்டனர். இந்து பசிபிக் பெருங்கடல்களில் கொரியா குடியரசு மற்றும் ஐந்தாம் தலைமுறை போரின் சூழல் என்ற தலைப்பில் இக் கருத்தரங்கு இடம் பெற்றது.

கருத்தரங்கின் ஒரு தனித்துவமான பிரிவில் மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் அமைதி ஒருங்கிணைப்பு ஆலோசனைக் குழுவின் இலங்கைக் கிளையின் கௌரவ ஆலோசனை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைதி ஒருங்கிணைப்பு ஆலோசனைக் குழுவின் அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இலங்கை பொலிஸ் அதிகாரிகள் பலர் இக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.