Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th November 2023 22:14:15 Hours

பூநாகரி தாக்குதலில் மறைந்த போர்வீரர்களுக்கு நினைவஞ்சலி

2009 மே மாதத்திற்கு முன்னர் பூநாகரி தாக்குதலின் போது காயம் அடைந்த மற்றும் உயிர் தியாகம் செய்த போர்வீரர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவதற்காக "போதி பூஜை” சனிக்கிழமை (நவம்பர் 11) 552 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1993 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி பூநாகரில் எல்ரீரீஈ பயங்கரவாத தாக்குதலில் இலங்கை இராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

வீரமரணமடைந்த போர்வீரர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் கடமைகளை போற்றி ஆசிர்வதிக்கும் வகையில் இப் போதி பூஜை நடைபெற்றது.

இந் நிகழ்வில் தேர்ர்களுக்கு 'அட்டபிரிகர' வழங்கி படையினர் மீது ஆசீர்வாதங்கள் கோரப்பட்டதுடன், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.கே.என்.சீ ஜயவர்த்தன ஆர்எஸ்பீ என்டிசீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 552 வது காலாட் பிரிகேட் படையினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

552 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், தாயகப் பாதுகாப்பிற்காக தம்மை அர்ப்பணித்த வீரமரணம் அடைந்த மற்றும் காயமடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், தர்ம பிரசங்கம் நிகழ்தப்பட்டதுடன், தேரருக்கு அட்டபிரிகரை வழங்கப்பட்டது.