Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th December 2023 16:50:37 Hours

புனே கருத்தரங்கில் பாதுகாப்பு அமைச்சு ஊடக பணிப்பாளர்

இந்தியா புனேவில் நடைபெற்ற மறைந்த ஜெனரல் பிபீன் ராவத் நினைவுக் கருத்தரங்கில், பாதுகாப்பு அமைச்சு ஊடக பணிப்பாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் கேணல் எம்.பி.பி.என் ஹேரத் ஆர்எஸ்பீ அவர்கள் டிசம்பர் 18 - 19 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில் பங்களாதேஷ், நேபாளம், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் மூலோபாய விவகாரங்கள் குறித்த நிபுணர்களுடன் ‘பிராந்திய பாதுகாப்பு: பிரச்சினைகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் கலந்துக் கொண்டார்.

இந்த கருத்தரங்கு புனே சர்வதேச நிலையத்தின் 'விஷ்வ-மித்ரதா' தொடரின் ஒரு பகுதியாகும். இது பீஐசி இன் முதன்மை கோட்பாட்டு ஆராய்ச்சி, புனே தேசிய பாதுகாப்பு குறித்த உரையாடல் மூலம் நடத்தப்பட்டதுடன், தெற்கு கட்டளை தலைமையகத்தினால் ஆதரிக்கப்பட்டது.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கேணல் எம்.பி.பி.என் ஹேரத் ஆர்எஸ்பீ அவர்கள், பிராந்திய நாடுகள் குறிப்பாக இலங்கை புவிசார் அரசியல் நிலப்பரப்பின் சமகால இயக்கவியலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பல அம்சங்களைப் பற்றிய கூறினார். அவரது கருத்துகள் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

சிறப்புப் பேச்சாளர்கள் குழுவில் லெப்டினன் ஜெனரல் பவன் பாண்டே, நேபாள இராணுவத்தின் முன்னாள் பொது பதவி நிலைப் பிரதானி, பங்களாதேஷ் முன்னாள் கடற்படை பிரதி பதவி நிலைப் பிரதானியும் முன்னாள் உயர் ஸ்தானிகருமான ரியர் அட்மிரல் ஏ.எஸ்.எம்.ஏ. அவால் (ஓய்வு) ஆகியோரும் அடங்குவர்.

பேச்சாளர்கள் பொருளாதார ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் மற்றும் தெற்காசிய நாடுகளிடையே மதிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். அந்தந்த நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளின் உணர்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளில் எதிர்கால எதிர்பார்ப்புகளையும் அவர்கள் ஆராய்ந்தனர்.

தேசிய பாதுகாப்பு குறித்த புனே கலந்துரையாடல் என்பது புனே சர்வதேச நிலையத்தின் ஒரு பகுதியாகும், இது ஒரு சுயாதீனமான, பன்முக கொள்கை ஆராய்ச்சி சிந்தனைக் குழுவானது இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பின் அவசியங்களை கருத்திற்கொண்டு, ஆலோசித்து, கவனம் செலுத்துகிறது. பாதுகாப்பு தயார்நிலை, நீர், உணவு, சுகாதாரம், ஆற்றல், தொழில்நுட்பம், பேரழிவுகள், தொற்றுநோய்கள் மற்றும் புவிசார் மூலோபாய வளர்ச்சிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளை குழு விவாதித்தது.

கருத்தரங்கில், மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தூதுவர் சுஜன் சினாய் அவர்களினால் தலைமையுரையும், தெற்கு சீ இன் பாதுகாப்பு படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் அஜய் குமார் சிங் அவர்களினால் வரவேற்பு உரையும், இந்தியாவிற்கான சீனா, பூட்டான் மற்றும் பாகிஸ்தானுக்கான முன்னாள் தூதுவர் கௌதம் பம்பாவாலே அவர்களினால் சிறப்பு உரையும், தேசிய பாதுகாப்பு பற்றிய புனே கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் லெப்டினன் ஜெனரல் விநாயக் பதான்கார் (ஓய்வு) அவர்களினால் தொடக்க உரையும் ஆற்றப்பட்டது.