Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2023 21:09:24 Hours

புனானியில் கிழக்கின் மும்மத மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பாடநெறி நிறைவு

கிழக்கின் 11 பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று முக்கிய இனங்களின் பாடசாலை மாணவ தலைவர்கள் கலந்து கொண்ட அசாதாரண இரண்டு நாள் "தலைமைத்துவ பயிற்சி" பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (22) புனானி 23 வது காலாட் படைப்பிரிவின் படையலகு பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யு.பீ குணரத்ன ஆர்டபிள்யூபீ என்டியூ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 06 அதிகாரிகள் அடங்கிய இராணுவப் பயிற்சிக் குழு கோட்பாட்டு விளக்கங்கள் மற்றும் நடைமுறைச் செயல் விளக்கங்களுடன் சிறப்பாகப் பின்னிப்பிணைந்த விரிவான கற்றல் செயலமர்வை நடாத்தினர். இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத் தளபதி கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

வெவ்வேறுபட்ட மூன்று இளம் தலைவர்கள் செயலமர்வின் போது தங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை எடுத்துரைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இளம் தலைவர்கள் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதியுடன் தொடர்புகொண்டு தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்ததுடன் தேநீர் விருந்துபசாரமும் நடைபெற்றது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள், படைப்பிரிவின் பணியாளர்கள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் 11 பாடசாலைகளின் கல்வி ஊழியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.