Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

புத்தூர் பெற்றோர்களுக்கு உலர் நிவாரண பொதிகள் விநியோகம்

52 வது படைப்பிரிவிற்கு அழைப்பிக்கப்பட்டிருந்த புத்தூர் மடிஹே பண்ணசீஹ வித்தியாலயத்தின் 44 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு கற்றல் உகபரணங்கள் மற்றும் உலர் நிவாரண பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு 08 ஏப்ரல் 2022 அன்று 52 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் உதய ஹேரத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இத்திட்டத்திற்கான நிதி உதவிகளை “தேசிய உரிமைகளுக்கான மகா சம்மேளனத்தின்” திரு டீடீ விஜேசிங்க, திருமதி லக்‌ஷ்மி திஸாநாயக்க மற்றும் அவரது பிள்ளைகளான கவீஷா ஜயனி, ஜானக குணதிலக்க ஆகியோர் இணைந்து வழங்கியிருந்ததோடு, விஜயபாகு காலாட் படையணியின் பிரதி தளபதி லெப்டினன் கேணல் பீடீடிடீ ஜயரத்ன அவர்களினால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

அதேநேரம் ஐந்தாம் ஆண்டு புலமை பரீசில் பரீட்சையில் 158 புள்ளிகளை பெற்றுகொண்ட மாணவர் ஒருவருக்கு கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஸ்ரீ நாரத சர்வதேச பௌத்த நிலையத்தின் வண. சந்திரகீர்த்தி தேரர் அவர்களினால் சைக்கிளொன்றும் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் 522 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ருவன் முனிபுர, 52 வது படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், 15 (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரியவர்களுடன் 15 (தொ) கஜபா படையணியின் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தனர்.