Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th April 2023 18:23:12 Hours

புத்தாண்டை முன்னிட்டு சிரேஷ்ட அதிகாரிகள், ‘அபிமான்சல’ மாற்றுத் திறனாளிகளை சந்திப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத் தளபதியின் வழிகாட்டலுக்கமைவாக அத்திடிய 'மிஹிந்து செத் மெதுர', அநுராதபுரம் அபிமன்சல - 1, கம்புருப்பிட்டி அபிமன்சல - 2 மற்றும் பங்கொல்ல அபிமன்சல - 3 ஆகியவற்றுக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், போர் வீரர்களின் நலன் குறித்து விசாரிப்பதற்கும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் ஏப்ரல் 24 சென்றிருந்தனர்.

அதன்படி, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ., சிரேஷ்ட அதிகாரிகள் குழுவுடன் அனுராதபுரம் 'அபிமன்சல 1'க்கு விஜயம் செய்தார். மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ சிரேஷ்ட அதிகாரிகளுடன் கம்புருபிட்டிய அபிமன்சல 2 ஐ பார்வையிட்டார். மேலும் பொதுப்பணி பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பங்கொல்ல அபிமன்சல 3 ஐ பார்வையிட்டார்.

இந்த விஜயத்தின் போது, அபிமன்சலவில் போர்வீரர்களின் நலம் விசாரித்ததுடன், சில பரிசுப் பொதிகளையும் அவர்களுக்கிடையே விநியோகித்தனர்.