Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st April 2023 21:50:47 Hours

புத்தளம் ஆட்சோர்ப்பு பயிற்சி பாடசாலையின் ஆட்சோர்ப்பு பாடநெறி – 99யின் விடுகை அணிவகுப்பு

புத்தளம் ஆட்சோர்ப்பு பயிற்சி பாடசாலையின் ஆட்சோர்ப்பு பாடநெறி – 99யின் விடுகை அணிவகுப்பு ஏப்ரல் 8 புத்தளம் ஆட்சோர்ப்பு பயிற்சி பாடசாலை பயிற்சி தளபதி லெப்டினன் கேணல் ஜேடப்ளியுஎம்எம்பி ஜெயக்கொடி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ தலைமையில் நடைப்பெற்றது.

ஆறு மாத பாடநெறியினை பயின்ற 31 சிப்பாய்கள் இறுதி தேர்வில் பங்குபற்றினர்.

இறுதி நிகழ்வின் போது ஆட்சோர்ப்பு பயிற்சி பாடசாலை தளபதி அவர்களினால் பிகேஏஎன்பீ ஜயரத்ன (சிறந்த சகலதுறை வீரர்) சிப்பாய் எச்ஏஎம்பி ஹெட்டியாராச்சி (சிறந்த மாணவர்), சிப்பாய் டபிள்யூஎம்வை மதுஷன் (சிறந்த உடற்தகுதி) ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்கள் விடுகை அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.