Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th June 2023 19:22:32 Hours

புத்தல இராணுவ போர் கல்லூரியில் ‘பொசன்’ நிகழ்வு

புத்தள இராணுவ போர் கல்லூரியில் சேவையாற்றும் படையினரால் ஏனைய அரச நிறுவனங்கள், சிவில் சமூகம் மற்றும் பிரதேசத்திலுள்ள வர்த்தக சமூகத்துடன் இணைந்து சனிக்கிழமை (03) புனித ‘பொசன்’ போயா தினத்தை கொண்டாடினர்.

இராணுவ போர் கல்லூரியின் படையினரால் தங்கள் அழகியல் திறன் மற்றும் தொண்டை வெளிப்படுத்தும் வகையில்,அலங்கார கூடுகள் மற்றும் 'பதச்சர' எனும் கதையை வடிவமைத்து காட்சிப்படுத்தினர், அதே நேரத்தில் அங்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஸ்ரீ ரஹதன்கந்த விகாரையின் பிரதம தேரர் வண. எல்பிட்டியே சுமனரதன தேரர் அவர்கள் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

புத்தள இராணுவ போர் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் வைஎஎம்பிஎம் யாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், படையினரால் ஆக்கப்பூர்வமான மற்றும் கண்கவர் வெசாக்கூடுகள் வைக்கப்பட்டிருந்தன. ‘ரஹதன் கந்த’ விகாரையின் பொசன் வலய ஏற்பாட்டுக் குழுவின் அழைப்பின் பேரில், அன்னதானம் மற்றும் வெசக் கூடுகளை புத்தள இராணுவ போர் கல்லூரியின் தளபதி, குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.

புத்தல உனவடுன ஸ்ரீ சுமங்கலா தர்ம பாடசாலை மாணவர்களால் பொசன் வலயத்தில் ‘பக்திகீதம்’ கச்சேரி நடாத்தப்பட்டது. அதில் பிரதம பயிற்றுவிப்பாளர் மற்றும் புத்தள இராணுவ போர் கல்லூரியின் படையினர் பலர் கலந்து கொண்டனர். புத்தல - மொனராகலை வீதியில் பயணித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொசன் தரிசனம் மற்றும் பொசன் வலயத்திற்கு வருகை தந்து கூடுகளை மகிழ்ச்சியுடன் பார்வையிட்டனர்.

பொசன் வலயத்தில் ஏற்பாடுகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் மகாசங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.