Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2023 20:53:27 Hours

புதிய விளையாட்டுப் பணிப்பாளர், இராணுவ விளையாட்டு குழுக்களின் செயலாளர்களுடன் சந்திப்பு

விளையாட்டுப் பணிப்பாளர், பிரிகேடியர் ஜி.ஏ.டி. கொடவத்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் அனைத்து இராணுவ விளையாட்டுக் குழுக்களின் செயலாளர்களை 2023 டிசம்பர் 21-23 ஆகிய திகதிகளில் பணிப்பகத்திற்கு அழைத்து அவர்களுடன் உரையாடினார்.

இராணுவ விளையாட்டுகளின் எதிர்காலம் குறித்த தனது பார்வை, பணி மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து அவர்களுக்கு விளக்கினார். மேலும், இராணுவ விளையாட்டுக்களில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளை தேர்ந்தெடுத்தல் மற்றும் மதிப்பீட்டு செயல்முறையை தெளிவுப்படுத்தினார்.

குழு செயலாளர்கள் 2024 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், நிதி அறிக்கைகள் மற்றும் பயிற்சி அட்டவணைகளை வழங்கினர். அவர்கள் அந்தந்த விளையாட்டு தொடர்பான நடைமுறை சிக்கல்கள், பார்வைகள் மற்றும் தேவைகளை முன்வைத்தனர்.