Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th June 2023 20:43:51 Hours

புதிய வடிவம் பெறும் இராணுவ இணையதளம்

நாட்டின் மிகவும் பரீட்சியமான பாதுகாப்பு இணையத்தளமான www.army.lk ஆனது, தற்போது மேம்படுத்தப்பட்ட தகவலுடன் மீள்கட்டமைக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள், இன்று (2023 ஜூன் 15) இராணுவத் தலைமையகத்தில் புதிய இணைய தளத்தையும், சிப்பாயின் சிந்தனைகள் எனும் இதழையும் ஆரம்பித்து வைத்தார். இராணுவ பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யுடபிள்யுடபிள்யுஎம்சிபி விக்கிரமசிங்க ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி, பிரதம சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யுஎஸ் ரத்நாயக்க என்டியு, இராணுவ ஊடாக பணிப்பாளர் பிரிகேடியர் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி, இராணுவ ஊடக ஆலோசகர் திரு. சிசிர விஜேசிங்க, கேணல் ஊடகம் கேணல் ஏஎம்டீபி அதிகாரி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி, ஊடக பொதுப் பணிநிலை அதிகாரி 1 லெப்டினன் கேணல் எச்ஜிஜேடி பெரேரா ஆர்எஸ்பீ, மற்றும் பல அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு முற்றிலும் மறுவடிவம் பெற்றுள்ள இணையதளம், முதல் முறையாக சாதாரண சிப்பாய்களினதும் இலக்கிய வசனங்கள் மற்றும் சிந்தனைகளுக்கான களத்தையும் கொண்டுள்ளது. தற்போதைய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள், ஐ.நா பணிகள், நிறுவன கட்டமைப்பு, பயிற்சி, சிவில் இராணுவத் திட்டங்கள், நலன்புரி, விளையாட்டு, சேவை வனிதையர் பிரிவின் பங்களிப்பு போன்றவற்றின் விரிவான விவரங்கள் மற்றும் தகவல்களும் இதில் பார்வையிடலாம்.

பிரதம சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யுஎஸ் ரத்நாயக்க உட்பட இலங்கை சமிக்ஞைப் படையணியின் தகவல் தொழிநுட்பவியல் குழுவினால் இது உருவாக்கப்பட்டுள்ளது. மேஜர் டபிள்யூபீஎஸ்டிபீ பட்டபெந்திகே அவர்களுடன், மேஜர்​ கேடபிள்யுஜிஎஸ்எஸ் விஜேரத்ன பீஎஸ்சி, மேஜர் டிடீ கங்காணம்கே, கெப்டன் டிகே ராமசிங்க, கெப்டன் ஏடபிள்யுஎல்ஏ அமுனுகம, கெப்டன் வி சுதர்சன் மற்றும் லெப்டினன் எச்டிபீ குணதிலக்க ஆகியோர் இந்த திட்டத்திற்கு பங்களித்தனர்.

இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஊடக பணிப்பகத்தின் அனைத்து நிலையினர் மற்றும் பொது மக்களின் அபிலாஷைகளுடன், உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் (www.army.lk) பராமரிப்புக்கு மேலதிகமாக, பதினைந்து நாட்களுக்கு அரை மாத செய்தி சுருக்க சஞ்சிகை,'சிப்பாயின் சிந்தனை',தேசத்தின் பாதுகாவலர்கள் எனும் முகப் புத்தகம் (defender of the nation), இராணுவ யூடியுப் (Army youtube), ட்விட்டர் (Army twitter) மற்றும் ஒத்த சமூக ஊடக வலைப்பதிவுகள் மற்றும் செய்தி தளங்களையும் பராமரிக்கிறது.