Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st July 2017 18:35:40 Hours

புதிய பிரதான பதவி நிலை உத்தியோகத்தர் நியமிப்பு

மேஜர் ஜெனரல் கே.எ.பி.எ அமல் கருணாசேகர அவர்கள் இராணுவத்தில் புதிய பிரதான பதவிநிலை உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்பொழுது சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லுாரியில் கட்டளை அதிகாரியாக பதவி வகிக்கின்றார்.

மேஜர் ஜெனரல் கே.எ.பி.எ கருணாசேகர ஆர்டபில்யூபி, ஆர்எஸ்பி, விஎஸ்வி, யூஎஸ்பி,என்டீயூ,பிஎஸ்சி இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் 15 ஆவது படைத் தளபதியாவார் இவர் 1981 ஆம் ஆண்டு இராணுவத்தின் கெடற் அதிகாரியாக இணைந்து இராணுவ எகடமியில் பயிற்சியை முடித்து இரண்டாவது லெப்டினனாக 1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியில் இணைந்தார்.

இவர் இராணுவத்தில் 35 வருட சேவையை சிறப்பாக புரிந்த அதிகாரியாவார். இந்தியா பங்களாதேசம், பாக்கிஸ்தான்,அமெரிக்கா,லன்டன், சீனா போன்ற நாடுகளில் இராணுவ நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக பயிற்சிகளை தொடர்ந்தவர் ஆவார்.

இவர் இராணுவத்தில் பொது பதவி நிலை கடமைகள், இராணுவ புலனாய்வு பணிப்பாளராகவும் காலாட்படைப் பணிப்பாளராகவும் போர் மாஸ்டர் ஜெனரல் பிரதானியாகவும் இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலக பணியகத்தின் பிரதானியாகவும் பல பதவிகளை புரிந்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு ஐக்கிய சமாதான நடவடிக்கை கடமைகளுக்கும் கட்டளை அதிகாரியாக சென்று கடமை புரிந்த அதிகாரியாவர். மேலும் பயங்காரவாதிகளுக்கு எதிராக யுத்த நடவடிக்கைகளிலும் காலாட்படை சார்பாக கடமை புரிந்துள்ளார்.

53 ஆவது படைப்பிரிவு மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் படைத் தளபதியாகவும் (DSCSC). தியத்தலாவை கெடற் கட்டளை அதிகாரியாவும் கடமை புரிந்தார்.

இவரது சேவையை பாராட்டும் பொருட்டு இரணவிக்கிரம பதக்கம் (RWP) ஆர்டபில்யூபி,இரண சூர பதக்கம் (RSP) ஆர்எஸ்பி, விசிஷ்ட சேவை பதக்கம் (VSV) விஎஸ்வி, உத்தம சேவை பதக்கம் (USP) யூஎஸ்பி போன்ற பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவர் நாலந்த கல்லுாரியில் தனது கல்வியை தொடர்ந்துள்ளார். பாடசாலையில் சிறந்த கெடற் மாணவனாக பதவி வகித்துள்ளார். இவரின் மனைவியாரின் பெயர் திருமதி தனஞ்ஜனி இவருக்கு ஒரு மகளும் உள்ளார்.

Sports News | GOLF NIKE SHOES