Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2022 18:46:55 Hours

புதிய இராணுவ பிரதி பதவி நிலைப் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா பதவி ஏற்பு

இலங்கை இராணுவத்தின் 3 வது சிரேஷ்ட நியமனமான இராணுவ பிரதிப் பதவி நிலைப் பிரதானியாக விசேட படையணியின் மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் புதன்கிழமை (16) இராணுவத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

பௌத்த பிக்குகளின் ‘செத்பிரித்’ பராயணங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் புதிய பதவியை ஏற்றுக்கொண்டதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர் துறவிகளுக்கு ‘தானம்’ மற்றும் ‘தாம்பூலம்’ வழங்கி ஆன்மீக ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

இந்த புதிய நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் கொஸ்கம இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் தளபதியாக கடமையாற்றினார். பதவி ஏற்பு நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், பிரதி பதவி நிலைப்பிரதானி அலுவலகப் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் சுருக்கமான விபரம்;

1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி பிறந்த இவர் பிலியந்தலை மத்திய கல்லூரியின் பெருமைமிகு உருவாக்கமான இவர் பாடசாலை காலங்களில் படிப்பிலும் விளையாட்டுலும் சிறந்து விளங்கினார்,

அவர் 1987 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி பயிலிளவல் பாடநெறி இல 27 இன் கீழ் இலங்கை இராணுவத்தில் பயிலிளவல் அதிகாரியாக சேர்ந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாவது லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டார். 1988 இல் இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியில் நியமிக்கப்பட்டார்.

அவர் டிசம்பர் 10, 1988 அன்று 3 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியாக கடமைகளையும் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். ஒரு உண்மையான சேவையாளரின் பணிகளை நிறைவேற்றும் நோக்கத்தில், இளம் அதிகாரியான பின்னர், இலங்கை இராணுவ விஷேட படையணியில் சேர்ந்தார், இது தேசத்தின் பாதுகாப்பிற்கான ஒரு தடுப்பு சக்தியாக தனது முழு வாழ்க்கையையும் தன்னார்வமாக அர்ப்பணித்தார். அதன்படி, விஷேட படையணிகளின் அடிப்படைப் பாடநெறி இலக்கம் 06 - ஐ வெற்றிகரமாக முடித்த அவர், 1989 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை இராணுவ விசேட படையணியின் வாரிசுகளின் பெரும் பரம்பரையில் அங்கம் வகிக்கும் ஆசி பெற்றார்.

அவரது இராணுவ வாழ்க்கை முழுவதும், அவர் கட்டளை, பணிநிலை அதிகாரி மற்றும் பயிற்றுவிப்பாளர் நியமனங்களில் பணியாற்றியுள்ளார், இது இலங்கை இராணுவத்தில் அந்தந்த நியமனங்களில் அவரது அசாதாரண திறன்களை எடுத்துக்காட்டுகிறது. மே 2009 க்கு முன்னர் 22 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கையின் போது அவர் தனது போர் கடமைகளின் மீது விதிவிலக்கான அர்ப்பணிப்புடன் தீவிரமாக பங்காற்றியுள்ளார். அவரது கட்டளை நியமனங்களில் 3 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியாகவும். முதலாவது விஷேட படையணி குழுவின் கட்டளை அதிகாரி, படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி, பிராவோ பிரிவின் இரண்டாம் கட்டளை அதிகாரி, விஷேட படையணி பயிற்சிப் பாடசாலை சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர், விஷேட படையணி பிரிகேட் மேஜர், 3 வது விஷேட படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, முதலாவது மற்றும் 3 வது விஷேட படையணியின் கட்டளை அதிகாரி, விஷேட படையணி பயிற்சிப் பாடசாலை தளபதி, 593 வது பிரிகேட் தளபதி, விஷேட படையணி பிரிகேட் தளபதி, விஷேட படையணி நிலையத் தளபதி மற்றும் - கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகம் பிரிகேடியர் பொதுப்பணி, மேலும், கிளிநொச்சி மற்றும் கொழும்பு 57 மற்றும் 14 வது காலாட் படைபிரிவுகளின் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார். அவர் இராணுவத்தின் பிரதி பதவி நிலைப் பிரதானியாக பதவியேற்பதற்கு முன்னர், இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் தளபதியாகவும் அதற்கு முன்னர், மேற்கு மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக பணியாற்றினார்.

மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா அவர்கள் 2010 இல் இலங்கையில் இராணுவத் தலைமையகத்தின் கீழ் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் பாடநெறி மற்றும் தலைமைத்துவ நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினை பெற்றார். இந்தியாவில் அடிப்படை பராசூட் பாடநெறி (1991), இந்தியாவில் கொமாண்டோ பாடநெறி (1992) போன்ற இராணுவப் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார். இந்தியா இளம் அதிகாரிகள் பாடநெறி (1996), பாகிஸ்தான் – இடைநிலை தொழிலாண்மை பாடநெறி (1996), இந்தியா - இராணுவ கண்காணிப்பாளர் பாடநெறி (2012), மற்றும் சீனா - படையலகு கட்டளை பாடநெறி (2013) போன்ற வெளிநாட்டு அனுபவங்களையும் பெற்றுள்ளார்.

அமெரிக்கா தென்கிழக்காசிய மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு (2007), 'மித்ர சக்தி' இந்து – இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி திட்டமிடல் மாநாடு (2012), சீனா – இலங்கை சிறப்பு கூட்டு நடவடிக்கை பயிற்சி (ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடல் மாநாடு) (2015) - சீனா, முதலாவது சர்வதேச கருத்தரங்கு "வன அப்பியாசங்கள்" (2015) – பிரேசில், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவுகள் இலங்கை விஷேட படையணிகளின் முத்தரப்பு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி (2015), பாகிஸ்தான் முத்தரப்பு கழுகு தாக்குதல் நடவடிக்கை – 1 (2016), ஐக்கிய அமெரிக்கா இராணுவ தரைப்படை கலந்துரையாடல் (பசுபிக் கட்டளைகள்) - ஹவாய் (2017), இராணுவத்திற்கு இராணுவப் பணிநிலை அதிகாரிகள் கலந்துரையாடல் (2022)- இந்தியா மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கருத்தரங்கு (2022) – ஜெனீவா என பல தொழில் சார் நிகழ்ச்சிகள், பட்டறைகள், கருத்தரங்குகள் போன்றவற்றில் அவர் கலந்துக்கொண்டுள்ளார்.

அவர் சீனாவில் உள்ள பெய்ஜிங்கின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் ஆவார், அங்கு அவர் இராணுவ மூலோபாயத்தில் தனது இரண்டாவது முதுகலையினைப் பெற்றுள்ளதுடன் தனது ஆரம்ப முதுகலைப் பட்டத்தை இலங்கை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத்தில் (பாதுகாப்பு) பெற்றுள்ளார்.

தன்னார்வ செயல்திறனுக்காக போரின் போது தனிப்பட்ட அல்லது அதனுடன் தொடர்புடைய துணிச்சலான செயல்களுக்காக சிரேஷ்ட அதிகாரி மூன்று முறை ரண விக்கிரம பதக்கம் என்ற வீர விருதினாலும் போரின் போது அவரது சிறப்பான நடத்தைக்காக அவர் நான்கு முறை ரண சூர பதக்கத்துடனும் அலங்கரிக்கப்பட்டுள்ளார். அவர் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம் மற்றும் ரிவிரெச சேவை பதக்கம் போன்ற பதக்கங்களைப் பெற்றுள்ளார். மேலும், அவர் 1998 இல் 50 வது சுதந்திர ஆண்டு பதக்கம், 1999 இல் இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு பதக்கம், இலங்கை நீண்ட ஆயுத சேவையின் சேவை பதக்கம், சேவாபிமானி பதக்கம், மற்றும் சேவை பதக்கம் ஆகியவற்றை அவர் நிறுவனத்திற்கு செய்த சிறப்புமிக்க சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தற்போது இராணுவ விஷேட படையணியின் படைத் தளபதியாக பணிபுரியும் அதே வேளையில், பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானியாகவும் பணியாற்றுகிறார்.

மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் திருமதி நயனி சாமந்தியை மணந்து இரண்டு மகன்மார்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.