Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th December 2023 08:30:51 Hours

புதிய இராணுவ பதவி நிலை பிரதானி புதிய பதவியின் பின் தனது படையணிக்கு விஜயம்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சி அவர்கள் இராணுவ தலைமையகத்தில் தனது புதிய பதவியினை பொறுப்பேற்றதும், கொழும்பு 02 ல் அமைந்துள்ள தனது படையணியான இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணிக்கு தனது முதல் விஜயத்தினை வெள்ளிக்கிழமை (15 டிசம்பர் 2023) மேற்கொண்டார்.

இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் சி களுஆராச்சி அவர்கள் மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சி அவர்களை அன்புடன வரவேற்றதுடன்பிரதான நுழைவாயிலில் பாது காவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அணிவகுப்பு மைதானத்தில் இராணுவ மரபுகளுக்கிணங்க அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதன் பின் அதிகாரிகளுக்கு உரையாற்றிய அவர் இராணுவத்தின் 3 வது முக்கியமான பதவிக்கு இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியை அடைய வழிவகுத்த அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

புதிய இராணுவ பதவி நிலை பிரதானியும் படையணியின் படைத்தளபதிமான அவர் அதிகாரிகளுடான குழுப்படம் எடுத்து கொண்டதினை தொடர்ந்து அனைத்து நிலையினருடான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.

அவர் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 4 வது இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி ஆவர். இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.