Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd April 2024 11:02:42 Hours

பீரங்கி படையணியின் 136வது ஆண்டு நிறைவு தினத்தில் போர் வீரர்களுக்கு இராணுவ தளபதி அஞ்சலி

இலங்கை பீரங்கி படையணி 136 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 2024 ஏப்ரல் 22 ஆம் திகதி இலங்கை பீரங்கி படையணியின் வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பி.கே.ஜி.எம்.எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் அழைப்பின் பேரில், இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.

வருகை தந்த பிரதம அதிதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டதுடன், இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி மரியாதையுடன் நினைவுத்தூபி வளாகத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர், தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதம் இசைக்கப்பட்டதுடன், சமய சம்பிரதாயங்களிலும் கலந்துகொண்டனர்.

பின்னர், உயிர்நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், இராணுவத் தளபதி முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சி.எஸ் வீரசூரிய (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து இலங்கை பீரங்கி படையணியின் போர் வீரர்களின் நினைவுத்தூபியில் மலர்ஞ்சலி செலுத்தினர்.

பின்னர், வீழ்ந்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கடைசி வாசிப்பு வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்றைய நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.