Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th November 2023 00:15:16 Hours

பிரிகேடியர் ஏ.ஜி.எஸ்.எம் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

குடாஓயா கொமாண்டோ பயிற்சிப் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (14) காலஞ்சென்ற எயார் மொபைல் பிரிகேட் தளபதியான கெமுனு ஹேவா படையணியின் பிரிகேடியர் எ.ஜீ.எஸ்.எம் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் இறுதிக்கிரியைகள் இராணுவ மரபுகள் மற்றும் மரியாதையுடன் வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் அவரது இராணுவத் தோழர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாபெரும் கூட்டத்தின் மத்தியில், இடம்பெற்றது.

இறுதிச்சடங்கில் இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி அலுவிஹார ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி, கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.பி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ ஆகியோர் உட்பட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

முதலில் இராணுவ மரபுகளின்படி கெமுனு ஹேவா படையினர் உடல் தாங்கிய பேழையை பெற்று, துப்பாக்கி வண்டியில் வைக்கப்பட்டு தேசியக் கொடியில் போர்த்தப்படுவதற்கு முன் பொரளை பொது மயானத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஆயுத மரியாதை வழங்கினர். இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், இராணுவ பிரதிநிதிகள் சவப்பெட்டியை சம்பிரதாயமாகப் பெற்றுக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் சவப்பெட்டியின் பின்னால் அணிவகுத்து மயானத்தை நோக்கிச் சென்றனர்.

இராணுவத் தளபதியினால் வெளியிடப்பட்ட முறையான சிறப்புப் கட்டளை I நிகழ்வில் துக்கத்தில் இருந்தவர்களுக்கு மேஜர் டபிள்யூ.டி.எஸ் ரொடிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களினால் வாசிக்கப்பட்டது. இராணுவ மரபுகளுக்கு இணங்க படையினர் இறந்தவருக்கு வணக்கம் செலுத்தி அடையாள துப்பாக்கி வணக்கத்தை வழங்கினர். இது ஒரு இராணுவ அதிகாரியின் மறைவின் போது பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலி ஆகும்.

கடைசி வாசிப்பிற்கு பின்னர், சிரேஷ்ட வீரர் அவரது நித்திய ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி எழுப்பப்பட்டதன் பின்னர் உடல் அடக்கம் செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் பின்னர், மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.பி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களினால், ஆயுதப்படையில் புகழ் பெற்ற பிரிகேடியர் ஏ.ஜி.எஸ்.எம் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களை இழந்த அவரது குடும்பத்திற்கு சின்னங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

பிரிகேடியர் ஏ.ஜி.எஸ்.எம் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 1992 ஜூலை 24 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் பயிளிலவல் அதிகாரியாக இணைந்து கொண்டதுடன், 1994 ஏப்ரல் 09 ஆம் திகதி ஜனாதிபதி ஆதிகாரவணையுடன் கெமுனு ஹேவா படையணியில் நியமிக்கப்பட்டார். எல்ரீரீஈ பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது அவர் காயங்களுக்கு உள்ளானார் மற்றும் அவரது மரணத்திற்கு முன்னர் வெவ்வேறு அலுவலகங்களில் துணிச்சலான காலாட் படை வீரராக பணியாற்றியுள்ளார்.