Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th January 2023 22:20:12 Hours

பாதுக்கையில் பால் மா பொதிகள் விநியோகம்

கொழும்பு பாதுக்க பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் 80 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 160 பால் மா பொதிகள் அப்பிரதேச செயலக அலுவலகத்திற்கு வியாழக்கிழமை (ஜனவரி 05) விநியோகிக்கப்பட்டன.

இத் திட்டத்தினை வரையறுக்கப்பட்ட ஃபோன்டெரா பிராண்ஸ் லங்கா நிறுவனத்தின் பசுமை விவசாய செயற்பாட்டு நிலையம் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்துடன் இணைந்து முன்னெடுத்தது.

கடந்த சில நாட்களில், கொழும்பு மாவட்டத்தில் 13 பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள வறிய பொதுமக்களுக்கு 4536 பால் மா பொதிகள் இவ்வாறு விநியோகிக்கப்பட்டன.

வியாழக்கிழமை (5) விநியோகம் செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் பாதுக்கை பிரதேச செயலக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் மற்றும் 15 வது ட்ரோன் இலங்கை பீரங்கிப் படையினர் இந்த திட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கினர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, வரையறுக்கப்பட்ட ஃபோன்டெரா பிராண்ஸ் லங்கா நிறுவனத்தின் தெற்காசிய முகாமைத்துவப் பணிப்பாளர் திரு யவுவான் விக்னேஷ்வரனுடன் இணைந்து விநியோக நிகழ்வில் சிறப்பித்தார்.

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பாதுக்கை பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.