Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd April 2023 20:20:57 Hours

பாதுகாப்பு சேவைகள் படகோட்டி போட்டியில் இராணுவ வீரர்கள் சாம்பியன்ஷிப்

இலங்கை விமானப்படையால் இந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த பாதுகாப்பு சேவைகள் படகுப்போட்டி சாம்பியன்ஷிப், முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான வீரர்களின் பங்கேற்புடன் தியவன்னாவ ஏரியில் மூன்று நாட்கள் (மார்ச் 22 தொடக்கம் 24) வரை நடைபெற்றது.

போட்டியின் போது, இராணுவ ஆண் மற்றும் பெண் இரு அணிகளும் முறையே 06 மற்றும் 04 பதக்கங்களை பெற்று சம்பியன்ஷிப் கிண்ணங்களை சுவீகரித்தனர். இராணுவ ஆண்கள் படகோட்டுதல் அணி 03 தங்கப் பதக்கங்களையும், 01 வெள்ளிப் பதக்கத்தையும், 02 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டதுடன், இராணுவப் பெண்கள் அணி 03 தங்கப் பதக்கங்களையும் 01 வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றனர்.

இலங்கை கடற்படை படகோட்டும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் இரு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன், விமானப்படை அணியினர் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.

இராணுவ படகோட்டிகளின் குறிப்பிடத்தக்க தனிப்பட்ட நிகழ்ச்சிகள் பின்வருமாறு;

கெப்டன் எம்பிசிஎச் லியனகே – 4 வது இராணுவ புலனாய்வுப் படையணி

ஸ்கல் பெண்கள் - தங்கப் பதக்கம்

இரட்டையர் ஸ்கல் பெண்கள் - தங்கப் பதக்கம்

சார்ஜென் டபிள்யூஜிஆர் சிந்தக குமார - 1 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி

காக்ஸ்லெஸ் நான்கு ஆண்கள் - வெள்ளிப் பதக்கம்

சார்ஜன் எஸ்ஜிஎஸ்கே வீரகோன் - 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி

ஜோடி பெண்கள் - தங்கப் பதக்கம்

இரண்டு ஸ்கல் பெண்கள் - வெண்கலப் பதக்கம்

கோப்ரல் ஈஎம்என்எஸ் சாகர – 5 வது இலங்கை கவச வாகன படையணி

இரண்டு ஸ்கல் ஆண்கள் - தங்கப் பதக்கம்

காக்ஸ்லெஸ் நான்கு ஆண்கள் - வெண்கலப் பதக்கம்

கோப்ரல் டிஎச்பிஎல் பெர்னாண்டோ - 20 வது கஜபா படையணி

காக்ஸ்லெஸ் நான்கு ஆண்கள் - வெண்கலப் பதக்கம்

கோப்ரல் எம்பீஎம் மடோன்சா - 1 வது இயந்திரவியல் காலாட் படையணி

காக்ஸ்லெஸ் நான்கு ஆண்கள் - வெண்கலப் பதக்கம்

கோப்ரல் பீஜிசிஎஸ் கருணாரத்ன - 3 வது இயந்திரவியல் காலாட் படையணி

ஜோடி ஆண்கள் - தங்கப் பதக்கம்

காக்ஸ்லெஸ் நான்கு ஆண்கள் - வெள்ளிப் பதக்கம்

லான்ஸ் கோப்ரல் டபிள்யூஎல்ஐஏ மதுசர – 10 வது இலங்கை சமிக்ஞை படையணி

காக்ஸ்லெஸ் நான்கு ஆண்கள் - வெள்ளிப் பதக்கம்

லான்ஸ் கோப்ரல் டிஐஎஸ் மெண்டிஸ் – 11 வது இலங்கை சமிக்ஞைப் படையணி

ஜோடி பெண்கள் - தங்கப் பதக்கம்

டபுள் ஸ்கல் பெண்கள் - வெண்கலப் பதக்கம்

லான்ஸ் கோப்ரல் எம்என்எம் நபிரான் - 11 வது இலங்கை சமிக்ஞைப் படையணி

ஸ்கல் ஆண்கள் - தங்கப் பதக்கம்

இரண்டு ஸ்கல் ஆண்கள் - தங்கப் பதக்கம்

லான்ஸ் கோப்ரல் ஜேஎச்எஸ் வைனகே - 12 வது இலங்கை சமிக்ஞைப் படையணி

இரட்டையர் ஸ்கல் பெண்கள் - தங்கப் பதக்கம்

லான்ஸ் கோப்ரல் ஆர்டிஎஸ் கருணாரத்ன - 2 வது இயந்திரவியல் காலாட் படையணி

காக்ஸ்லெஸ் போர் ஆண்கள் - வெள்ளிப் பதக்கம்

லான்ஸ் கோப்ரல் ஆர்எம்ஜிபீ பண்டார - 17 வது கஜபா படையணி

இரட்டையர் ஆண்கள் - தங்கப் பதக்கம்

காக்ஸ்லெஸ் போர் ஆண்கள் - வெள்ளிப்பதக்கம்

சிப்பாய் டிபீகேசி பண்டார - 12 வது இலங்கை சமிக்ஞைப் படையணி

ஸ்கல் ஆண்கள் - வெண்கலப் பதக்கம்