Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th March 2023 18:47:29 Hours

பருத்தித்துறை மம்மூத் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள்

பொதுமக்களுக்கு மனப்பான்மையுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கரையோரம் மற்றும் கடல் வளங்களின் பெறுமதியை அவர்களுக்கு புரியவைக்கும் நோக்கில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவின் 551 வது காலாட் பிரிகேடினர், முனை, பருத்தித்துறை, சுப்பர்மடம், சக்கோட்டை ஆகிய கரையோரங்களை சுத்தம் செய்யும் திட்டத்தை வியாழக்கிழமை (மார்ச் 17) முன்னெடுத்தனர்.

55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன மற்றும் 551 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜூட் காரியகரவன ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது சமூகத்தின் பங்களிப்பை ஈர்ப்பதற்காகவும், கடற்கரையை சுத்தம் செய்யும் முயற்சிகள் உட்பட சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி, பருத்தித்துறை பிரதேச செயலாளர் அலுவலகம், பருத்தித்துறை நகர சபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், கரையோர வள முகாமைத்துவம், பருத்தித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் 551 வது காலாட் பிரிகேட், 4 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 16 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணிகளின் படையினர் மற்றும் கடற் படையினர் இந்த கடற்கரையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக ஒன்றிணைந்தனர்.

அருட்தந்தை அன்டனி பெர்னாண்டோ பென்னட், பருத்தித்துறை நகர சபையின் தலைவர் திரு.நவரத்னராஜா, பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு.அல்வாய்ப்பிள்ளை சிறி, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பிரதிநிதிகள் மற்றும் மீன்பிடி சங்கங்களின் தலைவர்கள் உட்பட 500 இற்கும் மேற்பட்ட உள்ளூர் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.