Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பரா நீச்சல் போட்டியில் இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு வெற்றி

தொடர்ந்து 20ஆவது தடவையாக இலங்கை இராணுவ பரா ஒலிம்பிக் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நீச்சல் போட்டிகள் ஜூலை மாதம் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் பனாகொடை இராணுவ நீச்சல் தடாகத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி வெற்றியீட்டியது.

இலங்கை இலேசாயுத காலாட்படையணி 21 தங்கப் பதக்கங்களை பெற்று முதலாவது இடத்தையும்,கஜபா படையணி 17 தங்கப் பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

நான்கு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற இந்த போட்டியில் 6 படையணிகளை பிரதிநிதித்துவப் படுத்தி 100 விளையாட்டு வீரர்கள் பங்கு பற்றினர். இந்த பரிசளிப்பு விழாவிற்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் எம்.எம் கித்சிரி மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Running Sneakers Store | Nike, adidas, Converse & More