Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th October 2019 23:41:12 Hours

பனாகொடை விகாரையில் இடம்பெற்ற இராணுவ நினைவு தின மத வழிபாடுகள்

இம் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ பௌத்த சங்கத்தின் பூரன ஏற்பாட்டில் இம் மாதம் (7) ஆம் திகதி மாலை பனாகொடை இராணுவ போதிராஜாராமய விகாரையில் ‘ பிரித்’ மத வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்த மத வழிபாடுகள் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியாரும், இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியுமான திருமதி சுஜீவா நெல்ஷன் அவர்களது பங்களிப்புடன் கோட்டை ஶ்ரீ கல்யாணி சமகிரி தர்மா மஹா சங்க சபையின் வண. கலாநிதி இத்தபானே தம்மாலங்கார தேரர் அவர்களது தலைமையில் இந்த ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.

எட்டாம் திகதி காலை மஹாசங்க தேரர்களுக்கு தானங்கள் வழங்கி வைக்கப்படும் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த மத வழிபாடுகளினூடாக நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களையும் தற்போது சேவையிலுள்ள படையினர்களுக்கும் ஆசிர்வாதம் உண்டாகும் வகையில் இந்த மத வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்த மத நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே, இராணுவ மருத்துவ சேவை பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்கவும் அவரது பாரியாரும், மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே மற்றும் இராணுவ சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹெட்டியாரச்சி அவர்களும் பங்கேற்றுக் கொண்டனர். jordan Sneakers | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger