Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2023 10:16:02 Hours

பனாகொடவில் புத்தாண்டு இசை விழா

பனாகொடவில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இசை விழா வளர்ந்து வரும் இராணுவப் பாடகர்கள் மற்றும் இரண்டு பிரபலமான கலைஞர்களுடன் இடம் பெற்றது.

இலங்கை இராணுவ இசைக் குழுவு மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் இசைக் குழுவின் ஆதரவுடன் நடைபெற்ற 'ரணவிரு பீஸ்டா 2023' நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் முன்னிலையில் இடம் பெற்றது. பிரதம அதிதியான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இசை மாலையின் போது, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தளபதி சவால் கிண்ண கரப்பந்து போட்டி - 2023 ல் வெற்றி பெற்றவர்களுக்கு இராணுவத் தளபதி வெற்றிக் கிண்ணங்கள், சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கினார். அதன்படி, போட்டியில் வெற்றி பெற்ற மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக கரப்பந்து அணி சாம்பியன்ஷிப் கிண்ணத்தை பெற்றது. அன்றைய பிரதம அதிதியிடமிருந்து 143 வது காலாட் பிரிகேட் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றமைக்கான பாராட்டுப் பரிசுகளைப் பெற்றது.

'ரணவிரு பீஸ்டா 2023' நிகழ்வு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் அனைத்து படைப்பிரிவுகள், பிரிகேட்கள், படையலகுகள் மற்றும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் அனைத்துப் படையினரும் வழங்கிய பங்களிப்பில் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இராணுவ வீரர்களின் அழகியல் திறமை மற்றும் பாடும் திறன்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந் நிகழ்வு இடம் பெற்றது.