Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd December 2023 14:26:51 Hours

படையினரின் ஆதரவுடன் வன்னியில் புதிய விவசாய தொழில்நுட்பங்கள் அறிமுகம்

வன்னிப் பிரதேச விவசாயிகளிடையே விவசாய அபிவிருத்திக்கான விஞ்ஞான முறைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான கலந்துரையாடல் 2023 டிசம்பர் 19 அன்று வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டி.ஜெயசிங்கம், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஏ.டி.டபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ, விவசாய நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஏராளமான புத்திஜீவிகள், அரச அதிகாரிகள் மற்றும் விவசாயத்தில் பட்ட கற்கையினை பின்பற்றும் இளங்கலை பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டார்.

பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், கைவிடப்பட்ட நீர்ப்பாசன குளங்களை புனரமைத்தல், நீர் அமைப்புகள் மற்றும் நீர் முகாமைத்துவம், வவுனியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாய வயல்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் குறைப்பதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை முறைகள் மற்றும் நிகழ்நிலை விவசாய அடிப்படையிலான சந்தையை அறிமுகப்படுத்துதல் மற்றும் விவசாயிகள் ஊக்குவித்தல் போன்றவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகியோர் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியமான இராணுவ உதவிகள் பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி ஜே.நிமலன், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் (செல்வி) அ.நந்தகுமார், (சிரேஷ்ட விரிவுரையாளர்) முன்னாள் பீடாதிபதி, பிரயோக விஞ்ஞான பீடம், கலாநிதி. எஸ்.விஜேமோகன், உயிரியல் விஞ்ஞானப் பிரிவின் தலைவர் மற்றும் சிரேஷ்ட கல்விசார் பணியாளர்கள் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.