Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th July 2023 18:17:38 Hours

படையினரின் அனுசரனையுடன் ‘விக்கும்புர’ குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்

542 வது காலாட் பிரகேட் தளபதியாக சில வருடங்களுக்கு முன்னர் வன்னிப் பிரதேசத்தில் சேவையாற்றிய போது இராணுவத் தளபதியினால் நிறுவப்பட்ட மன்னாரில் உள்ள 'விக்கும்புர' மாதிரிக் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு அவர்களின் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்கும் முயற்சியில் பிரிகேட் மற்றும் அதன் கீழ் உள்ள கட்டளை அலகுகளில் அனைத்து நிலையினரின் உதவியினால் அண்மையில் இலவச உலர் உணவுகள் வழங்கப்பட்டன.

54 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டபிள்யூ.ஏ செனவிரத்ன யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இது தொடர்பாக முன்முயற்சி எடுத்து 25 உலர் உணவுப் பொதிகளை கிராமசேவையளரின் பரிந்துரைக்கமைய பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று அவற்றை வழங்கினார்.

விக்கும்புர வீடுகளில் உள்ள பல குடும்ப உறுப்பினர்கள் முறையான வருமானம் இல்லாமல், சாதாரண கூலி வேலை மற்றும் காய்கறிகள், நெல் போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். அந்த சிவில் மக்களின் மனிதாபிமான அம்சத்தை கருத்தில் கொண்ட படையினர் தானாக முன்வந்து தாராளமாக இந்த சிவில்-இராணுவ ஒத்துழைப்பு திட்டத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்கினர். சுமார் 5000/= பெறுமதியான ஒவ்வொரு பொதியிலும் உலர் உணவுகள், கருவாடு, தானியங்கள், டின் உணவுகள் போன்றவை அடங்கியிருந்தன.

542 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஆர்ஆர்எம்பீஎன்பி பம்பரதெனிய ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, 542 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 4 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி, 8 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி, 15 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி மற்றும் 8 வது விஜயபாகு படையணி படையினரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.