Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2022 18:43:00 Hours

படையினரால் யாழ் பொதுமக்களுக்கு மேலும் ஒரு புதிய வீடு நிர்மாணிப்பு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வறிய பொதுமக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், 55 வது படைப்பிரிவின் 551 வது காலாட் பிரிகேட் படையினர் மேற்கு பருத்தித்துறை புலோலி பிரதேசத்தில் வரிய குடும்பத்திற்கு ஒரு புதிய வீட்டை நிர்மாணித்தனர். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் தலைமையில் புதன்கிழமை (23) இடம்பெற்ற நிகழ்வின் போது பயனாளியிடம வீடு கையளிக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் சமூக நலன் சார்ந்த திட்டத்திற்கான நிதி உதவியை அனுசரணையாளரான திருமதி ஷீலா இம்மானுவேல் அவர்கள் வழங்கினார்.

551 வது காலாட் பிரிகேடில் இணைக்கப்பட்ட திறமையான இராணுவ படையினர், 551 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் வீட்டைக் நிர்மாணிப்பதற்கு மனிதவளம் , தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவத்தை வழங்கினர். அப்பகுதியில் உள்ள கிராம சேவை பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடாத்தப்பட்டு பயனாளிகள் அழைத்து வரப்பட்டனர். 55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன மற்றும் 551 வது காலாட்படை பிரிகேட் தளபதி பிரிகேடியர் சிந்தக விக்கிரமசிங்க ஆகியோர் இந்த திட்டத்தை ஒரு சில வாரங்களுக்குள் நிறைவு செய்யும் வரை நெருக்கமாக மேற்பார்வையிட்டனர்.

பருத்தித்துறை மேயர் திரு ஜோசப் இருதயராஜா, பருத்தித்துறை தவிசாளர் சார்ள்ஸ் ஆரியகுமார் ஆகியோர் வீடு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன், இந்து சமய வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் பயனாளியான குழந்தைகளுடன் வசிக்கும் விதவைப் பெண் திருமதி ஜெயபுரன் நந்தனி அவர் அன்றைய தினத்தின் வீட்டின் சாவியை பிரதம அதிதிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார். பருத்தித்துறை பிரதேச செயலாளர், திரு அல்வாய்ப்பிள்ளை சிறி, அரச அதிகாரிகள், பயனாளியின் உறவினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் நிர்மாணப்பணிகளுக்கு பங்களிப்பு வழங்கிய அதிகாரிகள் மற்றும் வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பகுதியின் தளபதி, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொதுப் பணி பிரிகேடியர் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.