Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2023 06:20:03 Hours

படையினரால் யாழ்ப்பாணத்தில் 767 வது வீடு நிர்மாணிப்பு

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகப் படையினர் துன்னாலையில் நன்கொடையாளரின் ஆதரவுடன் 767 வது வீட்டு திட்டத்தை நிறைவு செய்து பயனாளிகளிடம் வியாழக்கிழமை (ஏப்ரல் 06) யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட முன்னிலையில் கையளிக்கப்பட்டது.

551 வது காலாட் பிரிகேட் தளபதி தளபதி பிரிகேடியர் ஜூட் காரியகரவனவின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணப் பணிகளுக்கு 4 வது இலங்கை சிங்க படையணி முக்கிய மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கியதுடன் 4 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிஎம்ஜீஎன்எம்என் தலுகல 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்னவின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டத்தினை முன்னெடுத்தார்.

மட்டக்குளி லயன்ஸ் கழகம் மற்றும் மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) ஆகியோரின் ஒருங்கிணைப்பு மூலம் திருமதி தபிதா சின்னையா மற்றும் வன்னி எய்ட் அமைப்பு ஆகியவற்றின் நிதியுதவியுடன் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தவுடன், கரவெட்டி துன்னாலையில் வசிக்கும் திருமதி ரதீஸ்வரன் ராஜேஸ்வரி, அவரது மாற்றுத்திறனாளி கணவர் மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகள், யாழ். பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதியிடம் சாவியினை பெற்றனர். வீடு வழங்கும் சம்பிரதாயங்களின் முடிவில், குடும்பத்தின் தாயைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண் மிகவும் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்ததோடு, யாழ். படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்காகப் பாராட்டினார். (புகைப்பட செய்திகளில் அவரது நன்றியுணர்வைக் காண்க)

புதிய வீட்டிற்கான சாவிகள் அடையாளமாக கையளிக்கப்பட்ட பின்னர், அன்றைய தினம் பிரதம அதிதியால் உலர் உணவுப் பொதிகள், சமையலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பயனாளிகளுக்குப் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி எய்ட் உதவி அமைப்பின் திரு. என் ஜெகநாதன், கரவெட்டி உதவி பிரதேச செயலாளர் திருமதி. உமாகாந்தன் சிவகாமி, 551 மற்றும் 552 வது காலாட் பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், அழைப்பாளர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.