Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th June 2023 21:56:31 Hours

படையினரால் டெங்கு ஒழிப்பு திட்டம்

14 வது காலாட் படைபிரிவின் 144 வது காலாட் பிரிகேட்டின் 2 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் குழுவொன்று சனிக்கிழமை (24) டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இத் திட்டம் முல்லேரியா பொலிஸ் நிலைய பொலிஸாரின் ஒத்துழைப்புடன் களனிமுல்லை கிராம அலுவலர் பிரிவின் கொதடுவ சுகாதார பணிமனையின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் போது, 90க்கும் மேற்பட்ட வீடுகள் பங்கேற்பாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுப்புறங்களில் டெங்கு தொற்று பரவாமல் தடுப்பது தொடர்பாக, குடியிருப்பாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள், தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுதல், தண்ணீர் தாங்கிகளை சுத்தம் செய்தல், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக தெளிவூட்டப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய 144 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 2 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, ஆகியோரின் கண்காணிப்பில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.