Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2023 20:49:02 Hours

படையணி சார்ஜென்ட் மேஜர்கள் மற்றும் அதிகார வானையற்ற அதிகாரிகளுக்கு வன்னியில் செயலமர்வு

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம் ஜூலை 5 ம் 6 ம் திகதிகளில் தனது வளாகத்தில் தனது அனைத்து படைப்பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் படையலகு ஆகியவற்றின் படையணி சார்ஜென்ட் மேஜர்கள் மற்றும் அதிகாரவானையற்ற அதிகாரிகளுக்கான இரண்டு நாள் செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.

செயலமர்வில் பங்கேற்பாளர்களுக்கு தலைமைத்துவ பண்புகள், கட்டளைத் திறன், அதிகாரவானையற்ற அதிகாரிகளின் பொறுப்புகள், நிர்வாகத் திறன்கள், இறுதிச் சடங்குகள், ஒழுக்கம், ஆடை விதிமுறைகள், ஆகியவை பற்றிக் கற்பிக்கப்பட்டது.

இராணுவத் தலைமையக சார்ஜன்ட் மேஜர் அதிகாரவானையற்ற அதிகாரி 1 ஐடபிள்யூபீடிஆர் வீரசிங்க, தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் முன்னாள் சார்ஜென்ட் மேஜர் அதிகார வானையற்ற அதிகாரி 1 கேஆர்ஏ செனவிரத்ன (ஓய்வு), முன்னாள் இராணுவ தலைமையக சார்ஜென்ட் மேஜர்களான அதிகாரவானையற்ற அதிகாரி 1 ஜெஜிஎஸ் ஜயவீர (ஓய்வு), அதிகாரவானையற்ற அதிகாரி 1 எல்எச்டிடீ சரத் குமார மற்றும் அதிகார வானையற்ற அதிகாரி 1 டபிள்யூஎம்எஸ்பீ விஜேசிங்க ஆகியோரினால் இச் செயலமர்வு நடத்தப்பட்டது.

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்ஜிபீஎம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் செயலமர்வில் கலந்து கொண்டு அனைத்து அதிகார வானையற்ற அதிகாரிகள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு சின்னங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

மேஜர் ஜெனரல் சீடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், 90 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டனர்.

பிரிகேடியர் பொதுப் பணி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் நிறைவு விழாவில் கலந்துகொண்டனர்.