Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd June 2023 00:15:11 Hours

படையணிகளுக்கு இடையிலான புதியவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் விஜயபாகு படையணி சாம்பியன்

11 ஆண் அணிகள் மற்றும் 02 பெண் அணிகள் பங்குபற்றிய இராணுவப் படையணிகளுக்கு இடையிலான குத்துச்சண்டைப் போட்டி மே 30 முதல் ஜூன் 02 வரை பனாகொடை இராணுவ உடற் பயிற்சிப் பாடசாலையில் இடம் பெற்றது.

ஆண்கள் பிரிவில், விஜயபாகு காலாட் படையணி 05 தங்கம், 01 வெள்ளி மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களுடன் சாம்பியன்ஷிப்பை பெற்றது. இலங்கை இராணுவ சேவைப் படையணி 03 தங்கம், 01 வெள்ளி, 01 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுகொண்டது.

மேலும், இலங்கை சிங்கப் படையணி 02 தங்கம், 03 வெள்ளி மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று 3வது இடத்தைப் பெற்றது. மேலும், இயந்திரவியல் காலாட் படையணி மற்றும் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி 4 மற்றும் 5 வது இடங்களைப் பெற்றன.

அதற்கமைய இலங்கை சமிக்ஞை படையணி மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி ஆகியன, பெண்கள் பிரிவில் 02 தங்கம் மற்றும் 02 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று சாம்பியனாகின. இலங்கை சிங்கப் படையணியின் சிப்பாய் ஆர்எம் புஷ்பகுமார சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான விருதையும், சிப்பாய் பிடிஆர் மதுபாஷன சிறந்த தோல்வியாளர் விருதையும் பெற்றுக் கொண்டனர்.

இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.பிரிகேடியர் ஈஎம்ஜிஏ அம்பன்பொல, கிறித்த படையணிகளின் நிலையத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ குத்துச்சண்டைக் குழுவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.