Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படையணிகளுகிடையிலான ஸ்குவாஷ் போட்டியில் கஜபா படையணி வீரர்கள் வெற்றி

படையணிகளுகிடையிலான ஸ்குவாஷ் போட்டி - 2022 இன் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை (நவம்பர் 10) பனாகொட இராணுவ விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ ஸ்குவாஷ் குழுவின் தலைவரும் முதலாம் படை தளபதியும் கமாண்டோ படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கிருஷாந்த ஞானரத்ன அவர்கள் கலந்து கொண்டார்.

செப்டம்பர் 23 முதல் 30 வரை 16 படையணிகளை சேர்ந்த வீரர்கள் வெற்றிக்கிண்ணத்திற்காக போட்டியிட்டனர். கஜபா படையணி வீரர்கள் சம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்ததோடு இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி மற்றும் இலங்கை காலாட் படையணி வீரர்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றனர்.

கஜபா படையணி சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எஸ்.என் டேனியல் ஆண்களுக்கான திறந்த பிரிவில் வெற்றி பெற்றதோடு அதே சமயம் பெண்களுக்கான திறந்த பிரிவில் இலங்கை இராணுவ சேவைப் படையைச் சேர்ந்த சிப்பாய் பி.ஆர்.என்.ஜெயமாலி வெற்றிபெற்றார்.

பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன, 14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் ஜயமான்ன, விளையாட்டுப் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் நளின் பண்டாரநாயக்க மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் இறுதிப் போட்டிகளை பார்வையிட்டனர்.

போட்டியின் முடிவுகள் கீழ்வருமாறு:

ஆண்கள் அணி சாம்பியன்ஷிப்

வெற்றியாளர் - கஜபா படையணி

இரண்டாம் இடம் - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

மூன்றாம் இடம் – இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி

ஆண்கள் புதியவர்கள் அணி சாம்பியன்ஷிப்

வெற்றியாளர் - கமாண்டோ படையணி

இரண்டாம் இடம் - விஜயபாகு காலாட்படை படையணி

ஆண்கள் திறந்த பிரிவு

வெற்றியாளர் - லான்ஸ் கோப்ரல் எஸ்.என். டெனியல் - கஜபா படையணி

இரண்டாமிடம் - லான்ஸ் கார்போரல் பி.ஜி.என்.டி. பண்டார - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

மூன்றாம் இடம் - லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.எஸ்.எல்.கே. ஏக்கநாயக்க - இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி

பெண்கள் திறந்த பிரிவு

வெற்றியாளர் - சிப்பாய் பி.ஆர்.என். ஜெயமாலி - இலங்கை இராணுவ சேவைப் படையணி

இரண்டாமிடம் - லான்ஸ் கோப்ரல் என்.பி.ஜி.ஜி.டி. பிரியவன்ஷ - இலங்கை இராணுவ சேவைப் படையணி

மூன்றாம் இடம் - சிப்பாய் ஜே.ஆர்.எம்.என். ஜயலத் - இலங்கை இராணுவ சேவைப் படையணி

அதிகாரிகளின் திறந்த பிரிவு

வெற்றியாளர் - கேணல் எஸ்.எச்.பி.டி திலகரத்ன - இலங்கை இராணுவ சேவைப் படையணி

இரண்டாமிடம் - லெப்டினன் கேணல் டபிள்யூ. தசநாயக்க - கெமுனு ஹேவாபடையணி

மூன்றாம் - கெப்டன் ஜே.கே.டி.டி. சில்வா - இலங்கை இலேசாயுத காலாட் படையணி

பெண் அதிகாரிகளின் திறந்த பிரிவு

வெற்றியாளர் - கெப்டன் எச்.எம். அபேரத்ன - இலங்கை இராணுவ பொது சேவை படையணி

இரண்டாமிடம் - மேஜர் எஸ்.பி.ஐ.யு. தயாரத்ன - இலங்கை இராணுவ சேவைப் படையணி

மூன்றாம் இடம் - பெண் பயிலிளவல் அதிகாரி எம்.ஜி. அபேரத்ன - இலங்கை இராணுவ மருத்துவப் படையணி

ஆண்களின் புதியவர்கள்

வெற்றியாளர் - பொறியியல் சிப்பாய் ஏ.பி.டி.என்.என். நந்தசேன - இலங்கை பொறியியல் சேவை படையணி

இரண்டாமிடம் - சார்ஜென்ட் டி.ஏ.எஸ். வீரசிங்க - கொமாண்டோ படையணி

மூன்றாம் இடம் - கோப்ரல் ஏ.பி.எஸ்.எஸ். குமார - இலங்கை சமிஞ்சை படையணி

பெண்களின் புதியவர்கள்

வெற்றியாளர் - பெண் பயிலிளவல் அதிகாரி எம்.ஜி. அபேரத்ன - இலங்கை இராணுவ மருத்துவப் படையணி

இரண்டாமிடம் - லெப்டினன் பி.சி.ஜே. குமாரதுங்க - இலங்கை பொறியியல் படையணி

மூன்றாம் இடம் – சிப்பாய் ஜே.ஆர்.எம்.என் ஜயலத் - இலங்கை சமிஞ்சைப் படையணி

35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்

வெற்றியாளர் - சார்ஜென்ட் கே.ஜி. பிரபாத் – இலங்கை இலேசாயுத காலாட் படையணி

இரண்டாமிடம் - லான்ஸ் கோப்ரல் ஆர்.எச்.எம். ராஜபக்ஷ - இலங்கை இலேசாயுத காலாட் படையணி

மூன்றாம் இடம் - கோப்ரல் டி.டி.என். ரத்நாயக்க - கெமுனு ஹேவா படையணி

45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்

வெற்றியாளர் - கேணல் டி.கே.ஆர்.என். சில்வா - இலங்கை கவச வாகன படையணி

இரண்டாமிடம் - லெப்டினன் கேணல் டபிள்யூ. தசநாயக்க - கெமுனு ஹேவா படையணி

மூன்றாம் இடம் - கெப்டன் என்.வை.சில்வா - கஜபா படையணி

50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்

வெற்றியாளர் – கேணல் எஸ்எச்பிடி. திலகரத்ன- இலங்கை சமிஞ்சை படையணி

இரண்டாமிடம் - பிரிகேடியர் ஈ.ஏ.டி.கே. எதிரிசிங்க - பொறியியலாளர் சேவை படையணி

மூன்றாம் இடம் - பிரிகேடியர் எஸ்.பி.ஜி. கமகே - இலங்கை பொறியியல் படையணி