Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2023 22:41:33 Hours

படையணிகளின் டேக்வாண்டோ பயிற்றுனர்களுக்கு செயலமர்வு

இலங்கை இராணுவ டேக்வாண்டோ குழு, படையணி டேக்வாண்டோ பயிற்றுவிப்பாளர்களுக்கு அவர்களின் அறிவையும் பயிற்றுவிப்பாளர் திறனையும் மேலும் மேம்படுத்துவதற்காக டேக்வாண்டோ பயிற்சி செயலமர்வு ஒன்றை ஏற்பாடு செய்தது. 60 பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்ட இந்த செயலமர்வு நவம்பர் 21 முதல் 23 வரை பனாகொட இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்றது.

விளையாட்டு பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்டப்ளியுபீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாக செயலமர்வின் ஆரம்ப திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இராணுவ டேக்வாண்டோ குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இச் செயலமர்விக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.